நண்பனின் முன்னால் காதலி – 25

(Nanbanin Kadhali 25)

rahulraj 2015-09-21 Comments

This story is part of a series:

சாரி விக்கி கொஞ்சம் அவசரத்துல சமைச்சது அதனால் தான் அப்படி இருக்கு நான் நாளைக்கு நல்லா பண்றேன் என்றாள் .அதை கேட்டு விக்கி ஹலோ நீ என்ன என் பொண்டாட்டியா ஏதோ ஒரு அவசரத்துக்கு சாப்பிட்டேன் டெய்லி லாம் சாப்பாடு போட்டு என்னையே மயக்கலாம்னு பாக்காத விக்கி சாப்பாடுக்கு எல்லாம் மயங்குற ஆள் இல்ல என்றான் .

ஐயோ இவர் பெரிய மன்மதன் இவர மயக்க பாக்குறோம் ஏதோ பாவம் ஒரு பிரண்டா நினைச்சு வீட்டு சாப்பாடு கொடுப்போம்ன்னு பாத்தா ரொம்பதான் பிகு பண்றே போடா எனக்கும் வேல மிச்சம் என்றாள் .

அவனும் போடி என்று சொல்லி விட்டு தூங்க போனான் .ஆனால் அவன் ரூமுக்கு போயி அப்பா ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத்தான் நல்லா சாப்பிட்டு இருக்கோம் .பரவல இம்சை நல்லாத்தான் சமைக்குது .என்று மனதிற்குள் நினைத்து கொண்டு ஏப்பம் விட்டுவிட்டு தண்ணியை குடித்து விட்டு தூங்கினான் .ரொம்ப நாள் கழித்து அன்றுதான் நல்லாவும் தூங்கினான் .

அடுத்த நாள் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது .முந்தைய இரவில் நடந்தை எல்லாம் நினைத்து பார்த்தான் .பப்பில் அவன் செக்ஸ் ஆசைக்கு என்று ஒரு பெண் கிடைத்தும் அவளை தன் கொள்கைக்காக விட்டு கொடுத்தது வீட்டிற்கு வந்து சுவாதி சாப்பாட்டால் அவன் அம்மா அவனுக்கு ஞாபகம் வந்தது என்று எல்லாத்தையும் நினைத்து பார்த்தான் .

எல்லாவற்றிற்கும் மேலாக அன்று அவன் யார் கூடவும் உடலறுவு கொள்ளா விட்டாலும் நிம்மதியாக இரவு தூங்கியாதல் ஒரு வித சந்தோசத்தோடு எழுந்தான் .பின் சவரில் நன்கு பாட்டு பாடி கொண்டே குளித்து விட்டு உற்சாகத்தோடு ஆபிஸ் கிளம்பினான் .அப்போது அவன் கிளம்பும் போது சுவாதி கூப்பிட்டாள் .அதனால் எரிச்சலடைந்து ஏன் ஆபிஸ் போறப்ப கூப்பிடுர என்றான் ,அது வந்து என்று சுவாதி இழுத்தாள் .

இங்க பாரு நைட் நீ கொடுத்த சாப்பாடுக்காக எல்லாம் உன்னையே என் கார்ல உன் ஏப் எமுக்கு கொண்டு போயி விட முடியாது என்றான் ,நான் அத கேக்க வரலடா என்றான் .

பின்ன என்ன கேக்க வந்த என்றான் .அது எப்ப ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வருவ என கேட்டாள் .நீ என்ன என் பொண்டாட்டியா உனக்கு நான் எப்ப வருவேன்னு சொல்லி கிட்டு இருக்க என்றான் ,டேய் லூசு அதுக்கு இல்லடா வீட்டுக்கு கீ உன்கிட்ட மட்டும்தான் இருக்கு அதான் நீ வர டைத்துக்கு வீட்டுக்கு வர என்றாள் .

அதலாம் எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது .நீ முன்னாடி வந்த வெளிய உக்காந்து வெயிட் பண்ணு என்றான் .ஓகே விக்கி நான் வெயிட் பண்றேன் நீ ஆபிஸ் போ என்றாள் .

பின் இருவருமே கிளம்பி வெளியேறினார்கள் .விக்கி காரில் உக்காந்து இருந்தான் .சுவாதி நடந்து கொண்டு இருந்தான் .காரில் உக்காந்து யோசித்தான் சே நைட் அவ போட்ட சோறுக்காக வாச்சும் அவள திட்டாம இருந்து இருக்காலம் என்று நினைத்து கொண்டு இருந்தான் .

உண்மையில் விக்கியிடிம் வீட்டிற்கு ரெண்டு கீ வைத்து இருந்தான் .ஆனால் வேண்டுமென்றே தான் அவன் சுவாதியிடம் பொய் சொல்லி அதை தரமால் வைத்து இருந்தான் .

பின்னர் காரை மெல்ல மூவ் பண்ணி அவ கிட்ட போயி நிப்பாட்டி ஆரன் அடித்தான் .பின் இவன் கார் கண்ணாடியை திறந்து அவளை கூப்பிட்டான் .இங்க பாரு என்னால உன்னையே கார்ல எல்லாம் ஏத்தி கொண்டு போயி விட முடியாது ஆனா ஸ்பேர் கீ தரேன் என்றான்

அவள் அடப்பாவி வச்சுகிட்டே தான் பொய் சொன்னாயா என்று நினைத்து கொண்டு அவனிடிம் தேங்க்ஸ் விக்கி என்று சும்மா சிரித்து கொண்டு வாங்கினாள் .இங்க பாரு வீட்டு சாவியவே கொடுத்துட்டேன்ன்னு என் கிட்ட வேற ஏதும் நீ எதிர் பாக்க கூடாது சரியா என்றான் .

சரி சரி உன்கிட்ட ஒன்னும் எதிர் பாக்கல நீ கிளம்பு என்றாள் .அவனும் கார் கண்ணாடியை ஏற்றி விட்டு வேகமாக போனான் .சுவாதியும் அவள் வழக்கம் போல ரோட்டிற்கு போயி ஆட்டோ பிடித்து போனாள் .

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top